இந்தியா

”வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி மின்துறை தலைவர்

Veeramani

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம் எச்சரித்துள்ளார்.

அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கான மின் கட்டணத்தை தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக அதிகரித்து கொள்ள முடியாது என்பதால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனியார் மயமாக்கப்படும் பட்சத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் உடனடி சேவையும், சிறந்த பராமரிப்பும் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். எனவே, புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சண்முகம் விளக்கமளித்துள்ளார்.