அரசியல் கட்சிகள் இலவசங்களை அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி வழங்குவதைத் தடை செய்யக் கோரும் மனு மீது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பதற்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த அசோக் சர்மா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ரோஹிணி மற்றும் சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றது. இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.