ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தர பிதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதற்காக கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் கோயில் கட்டுவதற்காக கற்களில் உருவங்களை செதுக்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒருபுறம் கோயில் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி என்பதால் ராமர் கோவில் கட்டும் பணி தடையின்றி நடக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.