இந்தியா

‘வந்தே பாரத்’ ரயில் மீது கல் வீச்சு... ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு..!

‘வந்தே பாரத்’ ரயில் மீது கல் வீச்சு... ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு..!

Rasus

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக ரயில் மீது மீண்டும் கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். வாரணாசி- டெல்லி இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 17-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டபோது ரயிலில் ஏற்பட்ட கோளாரு காரணமாக ரயில் பாதியில் நின்றது. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து சில கல்வீச்சு சம்‌வங்களும் நடந்தன.

இந்நிலையில் அசல்டா என்ற பகுதியில் வைத்து ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டதால் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐந்து ரயில் பெட்டிகளின் ‌ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.