இந்தியா

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

webteam

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, அவர்களின் வங்கிக் கணக்குகளை கண்காணிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசால், நிதி நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு கறுப்புப்பணம் மற்றும் நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்குகளைக் கண்காணிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழல் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், வங்கி மூலம் கறுப்புப் பணம் செல்வதைத் தடுக்கவும் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிமாற்ற அறிக்கையை ஆய்வு செய்யவும், தனி நபர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழலை ஒழிக்கவும் இது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமான தனிநபர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையில் நடக்கும் லஞ்சம் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் முக்கியமாக இதில் ஆய்வு செய்யப்பட உள்ளது.