‘பத்மாவத்’ திரைப்பட வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகியிருந்தார். அவரை எதிர்த்து மத்திய அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா வாதிட்டார். இந்த விசாரணையின் போது, ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதோடு, மற்ற மாநிலங்களும் தடை விதிக்க கூடாதென தெரிவித்தது. அப்போது வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் துஷர் மேத்தா இடையே நடைபெற்ற விவாதம் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹரிஷ் சால்வே : ஒரு நாள் வரலாம், அப்போது நான் இங்கே நின்று கொண்டு, வரலாற்றை மாற்றி படைப்பது, படைப்பாளியின் உரிமை என வாதிட நேரிடும்.
துஷர் மேத்தா : அதற்கு நமது நாடு எப்போதும் தயாராக இருக்காது, மகாத்மா காந்தி மது அருந்துவது போல காட்ட முடியுமா? அது வரலாற்றை திரித்ததாக மாறாதா?
ஹரிஷ் சால்வே: அது எப்படி வரலாற்றை திரித்ததாகும், மகாத்மா மது அருந்தியதில்லையா? நீங்கள் ‘இயேசு கிறிஸ்து சூப்பர் ஸ்டார்’ படத்தை பார்ப்பது நல்லது.
துஷர் மேத்தா : அது இந்திய சினிமா தரத்துக்கான படமில்லை..
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.