இந்தியா

எண்ணெய், எரிவாயு திட்டம்; பொதுமக்கள் கருத்து தேவை : மத்திய அமைச்சர்

எண்ணெய், எரிவாயு திட்டம்; பொதுமக்கள் கருத்து தேவை : மத்திய அமைச்சர்

webteam

ஹைட்ரோ கார்பன் உள்பட அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கும் பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மக்களவையில் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ அளித்துள்ள ‌பதிலில், கடலில் இருந்தும், கடற்கரையில் இருந்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பு பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறினார்.

குறிப்பிட்ட பகுதியில் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரம் மாநில அரசிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‌மேலும், காவிரி பாயும் விவசாயப் பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், புதுச்சேரி முதல்வரும் பிரச்னை எழுப்பியுள்ளதாகவும் கூறினார்.

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்தை கேட்க தேவையில்லை என தகவல் வெளியாயிருந்த நிலையில், தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.