கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்க முடியாது என அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 முதல் 45 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை, அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதனடிப்படையில், ஸ்புட்னிக்-வி, ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளைப் பெற, பஞ்சாப் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டது. ஆனால், பஞ்சாப் அரசுக்கு நேரடியாக தடுப்பு மருந்துகளை வழங்க மாடர்னா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களின் கொள்கைப்படி, தடுப்பு மருந்து விவகாரங்களை இந்திய அரசுடன் மட்டுமே மேற்கொள்ள முடியும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.