start up companies x page
இந்தியா

2023-24 நிதியாண்டு |அதிக இழப்பைச் சந்தித்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்!

உலகில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

PT WEB

உலகில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் 450 ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேசமயம், பிரபலமாக அறியப்படும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நஷ்டத்தில் பயணித்துவருவது தெரியவந்துள்ளது. 2023-24 நிதி ஆண்டுக்கான நிதி விவரங்களை வெளியிட்ட 112 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 45 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. மீதுமுள்ள 67 நிறுவனங்கள் ரூ.21,472 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அதிக இழப்பை சந்தித்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தில் பார்ம்ஈசி (PharmEasy) உள்ளது.

model image

அந்நிறுவனம் 2023-24 நிதி ஆண்டில் ரூ.2,531 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்விக்கி ரூ.2,350 கோடி, மூன்றாம் இடத்தில் உள்ள ஓலா ரூ.1,584 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. ஓலா - ரூ.1,584 கோடி, பேடிஎம் - ரூ.1,422 கோடி, பிக்பேஸ்கட் - ரூ.1,267 கோடி, செப்டோ - ரூ. 1,248 கோடி, பிசிக்ஸ் வாலா - ரூ.1,131 கோடி, ஏதர் - ரூ.1,059 கோடி, கிளியர் ட்ரிப் ரூ.810 கோடி, அக்கோ (Acko) - ரூ.670 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.