இந்தியா

காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு: இளைஞர் கைது..!

காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு: இளைஞர் கைது..!

Rasus

தெலங்கானாவில் தன்னை காதலிக்க மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த மாணவி பி.டெக் படித்து வருகிறார். சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் என்பவர் அவரை ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. அவரது காதலை ஏற்க அந்தப் பெண் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக சொல்லப்படுகிறது. உயிருக்குப் போராடிய அவரை பொதுமக்கள் காப்பாற்றினர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்னுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவினாஷை கைது செய்துள்ளனர்.