இந்தியா

தீர்ப்பு கொண்டாடுவதற்கல்ல.... கடைபிடிப்பிடிப்பதற்கு: ஸ்டாலின்

தீர்ப்பு கொண்டாடுவதற்கல்ல.... கடைபிடிப்பிடிப்பதற்கு: ஸ்டாலின்

webteam

சொத்துக் குவிப்பு வழக்கில் கிடைத்த நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கு அல்ல, கடைப்பிடிக்கவே என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலுக்கு வருவோர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையோடு நேர்மையுடன் செயல்பட முன்வர வேண்டும் என்பதற்கும், ஊழல் செய்து சொத்துக்குவிப்பில் ஈடுபடும் பேராசைக்காரர்களாக இருக்கக்கூடாது என்பதற்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மிகச்சிறந்த பாடம் என கூறியுள்ளார்.

நாளைய சமுதாயமும், நாடும் முன்னேற இந்த தீர்ப்பின் வாசகங்களை ஒவ்வொரு அரசியல் தலைவரும், பொதுவாழ்வில் இருப்போரும் உற்று நோக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வழிகாட்டுதலில், பொதுச் செயலாளர் அன்பழகன் நடத்திய சட்டப்போரில் கிடைத்துள்ள இந்த வெற்றி கொண்டாடுவதற்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இது பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்க ‌வேண்டிய நெறிகளுக்கானது என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.