நீங்கள் பட்டப்படிப்பு முடித்து மத்திய அரசுவேலைக்காக காத்திருக்கும் இளைஞராக இருந்தால் உங்களுக்கான சரியான அறிவிப்பு இதுதான்.
14,582 காலிப் பணியிடங்கள் அடங்கிய மத்திய அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (SSC).
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு அறிவிப்பானது, மத்திய அரசில் உள்ள வெளியுறவு துறை, உளவு துறை, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை, வருவான வரித்துறை, சிபிஐ, தாபல் துறை, போதை மருந்து தடுப்புதுறை, வெளிநாட்டு வணிக துறை, என்ஐஏ, பாதுகாப்பு துறை உள்ளிட்டவற்றில் உள்ள உதவி அதிகாரி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆராய்ச்சி உதவியாளர், ஆடிட்டர், கணக்காளர், வரி உதவியாளர் என பல பதவிக்கான பணியிடங்களை உள்ளடக்கியுள்ளது.
இதற்கான கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 27-30 வயதை தாண்டாதவராகவும் இருக்க வேண்டும்.
இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயதில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
14,582 காலிப் பணியிடங்கள் நிரம்பிய இத்தேர்வை ஜுன் 9 முதல் ஆன்லைனில் (https://ssc.gov.in/) விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜுலை 4-ம் தேதிவரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கணினி வழியில் Tier I & II என இரண்டுகட்ட தேர்வாக நடைபெறும் இப்பணியிடங்களுக்கு 25,000 முதல் 1,40,000 வரை பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.