இந்தியா

‘பாகுபலி’ ராஜமவுலியிடம் ஆலோசனை கேட்ட ஆந்திர முதல்வர்

‘பாகுபலி’ ராஜமவுலியிடம் ஆலோசனை கேட்ட ஆந்திர முதல்வர்

webteam

ஆந்திராவின் புதிய தலைநகரமாக உருவாகிக்கொண்டிருக்கும் அமராவதியின் வடிவமைப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலியிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை கேட்டார்.

ஆந்திர மாநிலத்தை தெலுங்கானா மற்றும் சீமாந்த்ரா என இரண்டாக பிரிந்த பிறகு, சீமாந்த்ராவின் தலைநகராக அமராவதியை உருவாக்குவது என்று சந்திரபாபு நாயுடு முவுசெய்தார். இதையடுத்து சீமாந்திராவின் அரசுக் கட்டிடங்கள் அனைத்தையும் அமராவதிக்கு மாற்றுவதற்கும், அவற்றை அதிநவீன மற்றும் பாரம்பரியம் மிக்கதாக கட்டவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக பல கட்டட வல்லுநர்களையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் அவர் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமவுலிடம் சீமாந்த்ரா அரசு ஆலோசனை கேட்டுள்ளது. குறிப்பாக அமாரவதியில் அமையவுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டப்பேரவைக் கட்டடங்கள் குறித்து ராஜமவுலிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கட்டடங்கள் முழுவதும் தெலுங்குப் பாரம்பரியத்துடன் அமைய ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.