இந்தியா

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் - இந்தியாவிடம் ரூ.3,700 கோடி கடன் கேட்கும் இலங்கை

Sinekadhara

இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதைத் தவிர்க்க அந்நாடு இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது.

கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வாங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்குக்கூட பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே பெட்ரோல், டீசலை வாங்கும் நிலையில் அந்நாட்டின் பொருளாதார நிலவரம் உள்ளது.

இந்நிலையில், இப்பிரச்னையை சரிசெய்ய இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடனாக இலங்கை கேட்டுள்ளது. இத்தகவலை இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்தார். இலங்கையின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்றும், விரைவில் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.