இந்தியா

ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

webteam

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். ராஸ் -அல்- கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் இந்திய திரைப்படத்துறையில் மூத்தவரான ஸ்ரீதேவியின் பல்வேறு கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை. ஸ்ரீதேவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதேபோல் பல்வேறு திரை பிரபலங்கள் ஸ்ரீதேவியின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது! ஆயினும் நம் நெஞ்சில் எப்போதும் நிழலாடும்! என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.