இந்தியா

அதிகாரம் யாருக்கு ? முதல்வருக்கா ஆளுநருக்கா ! மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதிகள்

அதிகாரம் யாருக்கு ? முதல்வருக்கா ஆளுநருக்கா ! மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதிகள்

Rasus

டெல்லியில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான அதிகார மோதல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து டெல்லி அதிகார வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக புகார் கூறினார். இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து 3 நீதிபதிகள் அமர்வுக்கு டெல்லி அதிகார வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தீர்ப்பில், இணைச் செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். இணைச் செயலாளர் அந்தஸ்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருவார் எனவும் கூறினார். அதேபோல ஊழல் தடுப்பு பிரிவு, விசாரணை ஆணையம் ஆகியவையும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்குள் தான் வருவார் என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும் கூறினார். ஆனால் மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண் இதற்கு மாறுப்பட்ட கருத்தை தெரிவித்தார். இதன் காரணமாக இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.