இந்தியா

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

ஜா. ஜாக்சன் சிங்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணிகளை 'ஹேக்' செய்யும் முயற்சி நடைபெற்றதால் அதன் விமானங்கள் இன்று காலை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை 'ஹேக்' செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது 'ரேன்சம்வேர்' வகையிலான தாக்குதலாகும். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு உடனடியாக செயல்பட்டு இந்த ஹேக்கிங் முயற்சியை முறியடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையால் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இன்று காலை புறப்படுவதில் சிறிதளவு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

'ரேன்சம்வேர்' தாக்குதல் என்றால் என்ன?

'ரேன்சம்வேர்' தாக்குதல் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் மென்பொருளை தாக்கி, அங்குள்ள முக்கிய கணிணிகளில் இருக்கும் தகவல்களை ஹேக்கர்கள் முடக்கி வைத்து விடுவார்கள். பின்னர் அந்த தகவல்களை மீட்க வேண்டுமெனில் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ஹேக்கர்கள் தெரிவிப்பார்கள். இதனை சில நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாகவே சரிசெய்து விடும். சில நிறுவனங்கள் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பிரச்னையை சரி செய்வார்கள். இதுவே 'ரேன்சம்வேர்' தாக்குதல் ஆகும்.