இந்தியா

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு!

ச. முத்துகிருஷ்ணன்

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என விமானி அச்சம் தெரிவித்ததால் விமானம் பாகிஸ்தான் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி 11 விமானத்தின் இடது பக்க எரிபொருள் டேங்கில் இருந்து வேகமாக எரிபொருள் குறைவதை கண்டறிந்த விமானிகள் அதை சரிசெய்ய முயன்றும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்காத சூழலில் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் உதவியுடன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிக்கப்பட்டது.

முன்னதாக விமானம் அவசர அவசரமாக தரையிக்கப்பட்டது என செய்தி வெளியான நிலையில் அதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்தார். மேலும், விமானத்தில் பழுது ஏற்பட்டால் அதனை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கும் இண்டிகேட்டர் செயலிழந்ததன் காரணமாவே விமானம் தரையிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு குடிப்பதற்கு குளிர்பானம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாற்று விமானம் கராச்சி அனுப்பி வைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக துபாய் அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர்கள்: நிரஞ்சன் குமார், கணபதி சுப்ரமணியம்