பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழ்நாட்டிற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, பெங்களூருவிலிருந்து தூத்துக்குடிக்கு ஜனவரி 10 ஆம் தேதி, சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. பெங்களூருவிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தூத்துக்குடியை மறுநாள் காலை 11 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 2.40 மணிக்கு சென்னை செண்ட்ரலை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில், ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்தை இரவு 8 மணிக்கு சென்றடையவுள்ளது. அதேபோல், சென்னை செண்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஜனவரி 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, எர்ணாகுளத்தை இரவு 11 மணிக்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது..