இந்தியா

படேல் சிலையை சுற்றி பார்க்க சென்னையில் இருந்து சிறப்பு ரயில்!

JustinDurai

சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவுக்குச் செல்ல 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக கேவாடியாவில் உள்ள வல்லபாய் படேல் சிலையைக் காணச் செல்ல, 8 சிறப்பு ரயில்களை மோடி தொடங்கி வைக்கிறார். காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 8 பகுதிகளில் இருந்து கேவாடியாவுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஜனவரி 20 ஆம் தேதி முதல் சென்னை - கேவாடியா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.