இந்தியா

சசிகலாவுக்கு சலுகை... விசாரணை அதிகாரி அறிவிப்பு

சசிகலாவுக்கு சலுகை... விசாரணை அதிகாரி அறிவிப்பு

Rasus

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து வினய் எனும் அதிகாரி விசாரிப்பார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வினய்குமார் தலைமையில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க சிறைத்துறை டிஜிபி 2 கோடி லஞ்சம் பெற்றதாக, டிஐஜி ரூபா புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.