சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும் இதய கோளாறுகளையும் தவிர்க்கலாம் என பாஜக எம்பி கணேஷ் சிங் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா மீதான விவாதத்தில் எம்பி கணேஷ் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கம்ப்யூட்டர் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருள்களை வடிவமைத்தால் அதில் எவ்வித கோளாறுகளும் இருக்காது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியின் படி தெரியவந்துள்ளதாக கூறினார். மேலும், சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோயையும், இதய கோளாறுகளையும் மற்றும் கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றார்.