மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளவையாரின் ஆத்திசூடி பாடலை குறிப்பிட்டு பேசினார்.
மத்திய பட்ஜெட் உரையை இன்று வாசித்த நிர்மலா சீதாராமன், “சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி செய்யப்படும். விவசாய துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டம் உருவாக்கப்படும். விவசாய விளைப்பொருட்களை சேமிக்க கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.
பால், பழங்கள், காய்கறிகளை கொண்டு செல்ல தனியாக ‘கிசான் ரயில்’ இயக்கப்படும். அதற்காக புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும். கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக ‘தானிய லட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும். ‘கிருஷி உடான்’ புதிய திட்டம் மூலம், தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்” என்றார்.
இதனியையே ஒளவையாரின் ஆத்திசூடியை மேற்கோள்காட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அதாவது ‘பூமி திருத்தி உண்’ என்ற 3 வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஒளவையார் கூறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்து சாப்பிடு. அடுத்தவரிடம் கையேந்தாதே” என்பதே ‘பூமி திருத்தி உண்’ என்பதன் அர்த்தமாகும்.