இந்தியா

கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

JustinDurai

இந்தியாவுக்கு அதிகளவு பலன் தரக்கூடிய தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியது. 

தென்மேற்குப் பருவக் காற்று கடந்த மே 21 ல் வீசத் துவங்கியது. இதை தொடர்ந்து, மே 31ல் கேரளாவில் பருவ மழை பெய்யத் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வானிலை மையம் கணித்த தேதியில் கேரளாவில் மழை துவங்கவில்லை. இந்நிலையில், இன்று (ஜூன் 3 ) கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படியே, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியிருக்கிறது. 

செப்டம்பர் வரையில் நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் நாடு முழுவதும் வழக்கமான அளவு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென் மாநிலங்களில் மழைஅளவு 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.