இந்தியா

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம்

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்படும் முன் மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.  

அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அமைச்சர்கள் 8 பேர் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். 

அமித்ஷாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, இதே நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன் என்றார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அந்த துறையை அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் அவர் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரெயில் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ரெயில்வே துறையில் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக செய்யப்படும் மிகப்பெரிய மாற்றம் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பீகார் மாநிலத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மத்திய அரசு இணைக்கமாக செயல்படும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.