இந்தியா

ஆளில்லா விமானங்கள் மூலம் பொருள் டெலிவரி: அரசு பரிசீலனை

ஆளில்லா விமானங்கள் மூலம் பொருள் டெலிவரி: அரசு பரிசீலனை

webteam

ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் பொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 

அதன்படி, 250 கிராம் முதல் 150 கிலோ வரையான பொருட்களை ஆளில்லா விமானங்கள் மூலம் அனுப்ப அனுமதிப்பது பற்றி கொள்கை முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிறநாடுகளில் இந்த வசதிக்காக நடைமுறையில் உள்ளது போன்ற விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார். 

விமான நிலையங்கள், முக்கிய பாதுகாப்புக்குரிய இடங்களில் ஆளில்லாத விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது. மேலும், 200 மீட்டர் உயரத்துக்கு மேல் ஆளில்லா விமானங்கள் பறக்கக்கூடாது என்று விதிமுறை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.