இந்தியா

பாலியல் வன்முறைக்கு எதிராக தியேட்டர்களில் ஆவணப்படம்: மத்திய அரசு திட்டம்

பாலியல் வன்முறைக்கு எதிராக தியேட்டர்களில் ஆவணப்படம்: மத்திய அரசு திட்டம்

webteam

திரையரங்குகளில் விரைவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான ஆவணப் படங்களைத் திரையிட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆவணப்படம் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் எச்சரிக்கும் வகையில் இருக்கும். தற்போது ஒலிபரப்பப்படும் தேசிய கீதம் முடிந்தவுடன் இந்தி, ஆங்கிலத்தில் உருவான இந்த ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது. ஏற்கனவே, புகைப்பிடித்தல் குறித்த ஆவணப்படம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வுக்கு கிடைத்துள்ள வரவேற்பால், இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.