இந்தியா

ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்

webteam

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது. 

அதேசமயம், இன்று மாலை 4 மணி முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் தொலைப் பேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே 5 நிமிடங்கள் இந்தத் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கெடு இன்று இரவு 7.30 மணியுடன் நிறைவடையும் நிலையில் மகாராஷ்டிரா அரசியல் சூழலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.