காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி (வயது 78), மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவிற்கு பயணம் செய்த போது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிம்லாவில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். பின்னர் அவர் வீடு திரும்பி ஓய்வில் இருந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி அவருடைய மகள் பிரியங்கா காந்தி உடன் சிம்லாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தபோது உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சில பரிசோதனைகளை மேற்கொண்டதற்கு பின்னர் அவருடைய உடல்நிலை சீரானதையடுத்து, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பிவிட்டதாக துணை மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து பிடிஐ உடன் பேசியிருக்கும் இமாச்சல பிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர், "உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக சொல்லப்பட்டதை அடுத்து காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது ஒரு வழக்கமான பரிசோதனை, பரிசோதனைகள் முடிந்து தற்போது வீடு திரும்பிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார். தற்போது சோனியா காந்தி நலமுடன் மகள் வீட்டில் ஓய்வெடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.