இந்தியா

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

webteam

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக, சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இதை யடுத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப் படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இருந்தும் அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாகக் கூறப் பட்டது. அதன்படி இந்தக் கூட்டம் நாடாளுமன்ற மைய அறையில் இன்று கூடியது. 

ராகுல் காந்தி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதில் நாடாளுமன்றக் குழு தலைவராக, சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோக ன் சிங் பரிந்துரைத்தார்.  இதையடுத்து அவர் ஒரு மனதாக, தேர்ந்தெடுக்கப் பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் அவர் தலைவராக இருப்பார்.