இந்தியா

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சோனியா காந்தி

webteam

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வீடு திரும்பினார். 

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிறுக்கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இமாசலப் பிரதேசத்தின் சிம்லாவில் ஓய்வை கழிக்க சென்றிருந்த சோனியா காந்திக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லிக்கு திரும்பினார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கப்பட்டது. அவரது மகன் ராகுல் காந்தி தனது தாயார் நலமுடன் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சோனிகாந்தி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்ப்பில் அறிவுத்தப்பட்டுள்ளது.