இந்தியா

சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி!

sharpana

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று இரவு 7 மணிக்கு டெல்லியிலுள்ள  சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ”அவரது  உடல் நல்ல நிலையில்தான் உள்ளது. இது, வழக்கமான பரிசோதனைகளுக்குத்தான்” என்று மருத்துவமனையின் தலைவர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். முன்புபோல் கட்சித்தொடர்பான பணிகளுக்கு வெளியிலும் வருவதில்லை.  73 வயதாகும் சோனியா காந்தி தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கடுமையான வயிற்றுவலி இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் இதே கங்காராம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, மத்திய பட்ஜெட் குறித்த விவாதங்களையும் தவறவிட்டுவிட்டார்.