இந்தியா

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் - மருத்துவமனை

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் - மருத்துவமனை

Veeramani

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்துவரும் மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதால், லதா மங்கேஷ்கர் கடந்த 8-ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவக்குழுவின் தலைவர் பிரதித் சம்தானி வெளியிட்டுள்ள அறிக்கையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார்.

லதாவின் உடல்நிலை குறித்து நாள்தோறும் அறிக்கை வெளியிடுவது அவரது குடும்பத்தின் தனியுரிமையில் நேரடியாக தலையிடுவது போலாகும் என்பதால் அவ்வாறு செய்வதில்லை என்றும் சம்தானி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.