ஸ்ரீதர் வேம்பு pt web
இந்தியா

“இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு

இந்தியா அதன் தொழில்நுட்பத் தேவைக்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் நம் நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை நம் மக்களின் திறன்களைப் பயன்படுத்தி உருவாக்க வேண்டும் என்றும் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

PT WEB

ஸ்ரீதர் வேம்பு

நவீன தொழில்நுட்பங்களுக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்து இருக்கிறது. மேலும், திறன் கொண்ட இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில் இந்திய மக்களின் திறன்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலக அரங்கில் உண்மையான மதிப்பைப் பெற, நாம் உள்நாட்டிலேயே வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார். உள்ளூர் திறன்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலமே நீடித்த வளர்ச்சி பெற முடியும் என்றும் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.