இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் சமூகபன்முகத்தன்மை காக்கப்படும்: திமுக கடிதத்துக்கு மத்தியஅரசு பதில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூகபன்முகத்தன்மை காக்கப்படும்: திமுக கடிதத்துக்கு மத்தியஅரசு பதில்

Veeramani

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பன்முகத்தன்மை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனுக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு வில்சன் கடிதம் எழுதியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி வில்சல், “உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 5.9.2020ல் இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் பதில் அனுப்பியுள்ளார்.

அதில் "உச்சநீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையை காக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும், சமூக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களைச் சேர்ந்த பொருத்தமானவர்களை நியமிப்பதில் உரிய கவனம் செலுத்தப்படும்” என்று உறுதியளித்துள்ளார்”என தெரிவித்தார்.