இந்தியா

சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகள்..! மக்கள் கடும் அவதி..!

jagadeesh

ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், ரஜோரி, ரம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பனியானது வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று காட்சியளிக்கிறது. மரங்கள், சாலைகள், வீடுகள் என அனைத்துப் பகுதிகளும் பனியால் மூடப்பட்டு வெண்பட்டு தரித்தது போன்று காட்சியளிக்கின்றது. பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் கடும் பனிப்பொழிவு காரணமாக கேதர்நாத் கோயில் உறைபனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள அனைத்து இடங்களும் வெண்பனியால் போர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இமயமலையை ஒட்டியுள்ள ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதும் கடும் பனிப்பொழிவு காணப்படுவததால், வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் குறைவாகச் சென்று விட்டது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குலு, மணாலியில் கடும் குளிர்காற்று வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.