இந்தியா

பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய உ.பி. காவ‌ல்துறை

பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய உ.பி. காவ‌ல்துறை

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து காங்கிரஸ் பொது‌ச் செயலாளர் பிரியங்கா காந்தி இருசக்கர வாகனத்தில் ‌பயணி‌த்து முன்னாள்‌ ஐ‌.பி.எஸ் அதிகாரியின் குடும்பத்தினரை சந்தித்தார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஐ.பி.‌‌எஸ். அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர‌து குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனையடுத்து நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா காந்தி, தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பெண் காவலர் ஒருவர் தன்னை கழுத்தை நெரிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.