இந்தியா

இளம் பெண்களிடையே அதிகரிக்கும் புகைப்பழக்கம்: ஆய்வில் தகவல்

rajakannan

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் பெண்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ASSOCHAM ன் சமூக மேம்பாட்டு‌ அறக்கட்டளை, அகமதாபாத், பெங்களுரு, சென்னை, டெல்லி,‌ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களில் 2 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. 22 முதல் 33 வயதுக்குட்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 40 சதவிகித பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும், 2 சதவிகிதம் பேர் புகைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. 12 சதவிகித பெண்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 சிகரெட் பிடிப்பவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றால் புகைப்பழக்கத்தை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்

பெண்களின் புகைப்பழக்கம் கருவில் இருக்கும் சிசுவையும் சிதைக்கும் பலம் கொண்டது என்று கூறும் மருத்துவர்கள், உயிரணு குறைப்பாடு, கருச்சிதைவு என இளம் தம்பதியினரின் பிள்ளைக் கனவை கலைக்கும் நாகரீக அரக்கனாகிவிட்டது என்கிறார்கள். மனநல மருத்துவரிடம் முறையான ஆலோசனை, உடற்கட்டுப்பாடு, நல்ல நண்பர்கள் என வாழும் முறையை மாற்றியே ஆரோக்கியத்தை‌ மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.