டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கு அதனைத் தடுக்கும் வகையிலான சுவாசக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மெட்ரோ பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 8 ஆயிரம் வீரர்களுக்கும், விமானநிலைய பாதுகாப்பு வீரர்கள் ஆயிரம் பேருக்கும் கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல், டெல்லியில் பிற இடங்களில் பணிபுரியும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஆயிரம் பேருக்கும் காற்று மாசை தடுக்கும் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. காற்று மாசு குறித்து பேசிய முதலமைச்சர் கெஜ்ரிவால், டெல்லி நகரை எரிவாயு அறை என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு வருடமும் இதுபோன்று ஏற்படுவதாகவும், இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் எனவும், கெஜ்ரிவால் கூறியுள்ளார்.