இந்தியா

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகல்!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகல்!

Rasus

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அவர் எழுதியுள்ள ஒரு வரி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திடீர் முடிவுக்கு காரணம் எதையும் கூற மறுத்த எஸ்.எம். கிருஷ்ணா இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஆளுநராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா கட்சியில் ஓரம்கட்டப்படுவது குறித்து அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.