இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வரி சீர்திருத்தம் செய்துள்ளோம் - அருண் ஜெட்லி

rajakannan

வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், நியாயத்தையும் உறுதிப்படுத்தும் வகையிலும் அரசு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருண் ஜெட்லி 50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி கணக்கை தாக்கல் செய்ய ஒரு பக்க படிவம் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும், “ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கு வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் மிகவும் குறைவான வரிவிதிப்பு ஆகும். ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும் சிறுவியாபரிகளை ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்ய வைத்து வரி வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு 97 சதவீதம் பேர் மின்னணு வசதி மூலம் வரி தாக்கல் செய்துள்ளார்கள். அதில் 92 சதவீதம் பேரின் வரித்தாக்கல் 60 நாட்களில் சரிபார்க்கப்பட்டது” என்றார்.