தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் பேசிய அவர், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல் போன்றவற்றிற்கு மக்கள் அச்சமின்றி செல்லமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் கூட அப்படியான பயம் மக்களிடம் இருந்ததில்லை எனக் கூறினார்.
அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று தெரிவித்த ராஜபக்சே, தமக்கு கீழ் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கே அதற்கான உரிமையிருப்பதாகக் கூறினார். நாட்டுமக்களுக்காக எதிர்கால சந்ததியினருக்காக பிறந்த மற்றும் பிறக்கப்போகின்ற பிள்ளைகளுக்காக ஆளும் இந்த அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு நாம் இணைய வேண்டும் என ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.