இந்தியா

சர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி

webteam

கர்நாடகாவில் உள்ள சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பாகல் கோட் மாவட்டத்தில் நிரானி சர்க்கரை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பணியாளர்கள் ஆலையில் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொதிகலன் வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தச் சர்க்கரை ஆலை பாஜக முன்னாள் அமைச்சர் மற்றும் பில்ஜி எம்.எல்.ஏ முருகேஷ் நிராணிக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில் இந்த விபத்து இன்று மதியம் 12 மணியிலிருந்து 12.30 க்குள் நடந்துள்ளது எனவும் விபத்தின் போது அந்த இடத்தை சுற்றி 20 க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.