இந்தியா

உச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி!

webteam

காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இன்று ஸ்ரீநகர் புறப்பட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர் முகமது யூசுப் தரிகாமியை (Yousuf Tarigami) சந்திக்க வேண்டும் என்றும் அதற்காக அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என் றும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிமன்றம் அவர், காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கியது. அங்கு செல்லும்போது எந்த அரசியல் நடவடிக்கையிலும்  ஈடுபடக் கூடாது என்றும் அப்படி செய்தால் அது நீதிமன்ற அவமதிப் பாகக் கருதப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதையடுத்து, இன்று காலை சீதாராம் யெச்சூரி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீநகர் புறப்பட்டார்.