இந்தியா

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோமணி அகாலிதளம்!

Veeramani

நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம் கட்சி.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பண்ணை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சி முடிவு செய்துள்ளதாக நேற்று அந்த கட்சி அறிவித்தது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ட ஆதாரவிலையை உறுதி செய்து பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வமான உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்து வருவதாலும், பஞ்சாபி மற்றும் சீக்கிய பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக மத்திய அரசு உணராத காரணத்தாலும் இந்த முடிவை எடுத்ததாக சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது.

முதன்முதலாக இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதலின் மனைவியான ஹர்சிம்ரத் கெளர் தனது மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பஞ்சாப் மற்றும்  ஹரியானாவில் விவசாயிகள் இந்த வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு மக்களவையில் 4 நான்கு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் உள்ளனர்..