இந்தியா

“நான் இந்தியன்; வெறுப்பை பரப்பாதீர்கள்’’ - பாடகர் தில்ஜித் தோஸாஞ்!

“நான் இந்தியன்; வெறுப்பை பரப்பாதீர்கள்’’ - பாடகர் தில்ஜித் தோஸாஞ்!

EllusamyKarthik

தான் ஒரு இந்தியன் என பாடகர் தில்ஜித் தோஸாஞ் தெரிவித்துள்ளார்

பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்டவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தில்ஜித் தோஸாஞ். 36 வயதான அவர் அண்மையில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் போராட்டத்தில் இணைந்தார். அது வைரல் டாக்காக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டன. பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவும் கொடுத்திருந்தனர். ஒரு சிலர்  அவருக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்திருந்தனர். 

“விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” என போராட்ட  இருந்த போது கருத்தும் தெரிவித்திருந்தார் அவர். அதோடு விவசாயிகளுக்கு நன்கொடையாக நிதியும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் இந்தியனே இல்லை என சொல்ல ஆரம்பித்தினர் திலஜித்தை எதிர்த்தவர்கள். 

அதற்கு பதில் கொடுக்கும் வகையில் 2019 - 20 நிதியாண்டில் வருமானவரித்துறை தனக்கு கொடுத்த சான்றை ஆதாரமாக ட்விட்டரில் அதனை வெளியிட்ட திலஜித் “சூழ்நிலைகளே நான் இதை வெளியிட காரணம். இதை விரும்பவும் இல்லை. இதோ நான் இந்தியாவின் குடிமகன் தான் என்பதற்கான ஆதாரம்.  வெறுப்பை பரப்பாதீர்கள்” என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் வருமான வரித்துறை இப்போது திலஜித் விவசாயிகளுக்கு நன்கொடையாக கொடுத்த பணம் வெளிநாட்டு பணமா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நடிகை கங்கனா ரனாவத் திலஜித்தை கடுமையாக  ட்விட்டரில்  சாடி  வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.