கர்நாடகாவில் 1952 முதல் கணக்கிட்டால் வெறும் 4 முதலமைச்சர்கள்தான் முழு ஆட்சியான 5 வருடத்தை இதுவரை பூர்த்தி செய்துள்ளனர்.
இந்தியாவே கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகாவின் முதலமைச்சரான குமாரசாமி ஆட்சியைத் தொடர்வாரா? இல்லை அவரது ஆட்சி முடிவுக்கு வருமா? என எல்லோரும் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
(தேவராஜா)
கர்நாடகாவை பொறுத்தவரை 1952 முதல் கணக்கிட்டால் இதுவரை வெறும் 4 முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். 1962-67 ஆண்டுகள் வரை நிஜலிங்கப்பா 5 ஆண்டுகளை பூர்த்தி செய்தார். அதேபோல், 1972-78 தேவராஜாவும், 1999-2004 ஆண்டுகளில் எஸ்.எம். கிருஷ்ணாவும், 2013-18 ஆண்டுகளில் சித்தராமையாவும் தங்களது 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளனர்.
(எஸ்.எம். கிருஷ்ணா)
இந்நிலையில் தற்போதைய முதலமைச்சர் குமாரசாமியும் தனது ஆட்சியை நீடித்து இந்த வரிசையில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.