கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 11,680 ரூபாயும், வெள்ளி விலை கிலோவுக்கு 84ஆயிரம் ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் முதலீட்டை குவித்து வருகின்றனர்.
சர்வதேச காரணிகளே தங்கம், வெள்ளி விலையை தீர்மானிக்கின்றன. எப்போதெல்லாம் சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை உயர்வது வழக்கம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியில் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.
கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 11,680 ரூபாயும், வெள்ளி விலை கிலோவுக்கு 84ஆயிரம் ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அதன் அதிபர் மதுரோவை கைது செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் ட்ரம்ப் இறங்கியுள்ளார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்நாடுகள் மீது வரிவிதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். விளைவாக, சர்வதேச அளவில் பதற்றமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் முதலீட்டை குவித்து வருகின்றனர்.