இந்தியாவில் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு சென்ற 5 நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 25 ஆயிரத்து 833 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு 607ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் 2 ஆயிரத்து 387 பேரும், சத்தீஸ்கரில் 211 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 மாநிலங்களில் டிசம்பருக்கு பிறகான அதிகரிப்பும், புதுச்சேரியில் சென்ற நவம்பருக்கு பிறகாக 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, 7 மாநிலங்களில் சென்ற ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு வாரத்திற்கான சராசரி விகிதம் கடந்த 5 நாட்களில் 5 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 7 நாட்களுக்கான சராசரி கடந்த 5 நாட்களில் 5.2 சதவிகிதம், 5.8 சதவிகிதம், 6 புள்ளி 6 சதவிகிதம், 7 புள்ளி 4 சதவிகிதம் மற்றும் 8 புள்ளி 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பின் சராசரி 10 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.