சுபன்ஷு சுக்லா எக்ஸ் தளம்
இந்தியா

ஆக்சியம்-4 பயணம் | இன்று தொடக்கம்.. இந்திய வீரர் சுபஷ்ஷு சுக்லா உருக்கம்!

"என் வாழ்நாள் முழுவதும் முதலில் பறக்கும் வாய்ப்புகளைப் பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவேன்" என சுபஷ்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.

Prakash J

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இன்று செல்ல இருக்கின்றனர். முன்னதாக, இந்தப் பயணம் 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.

Shubhanshu Shukla & team

இதுகுறித்து சுபன்ஷு சுக்லா, "நான் ISS-ல் 14 நாட்கள் செலவிடத் தயாராகும் வேளையில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல, ஒரு பில்லியன் இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன். நான் செல்லும் இந்தப் பயணம். இது எனக்கு நீண்ட பயணமாக இருந்து வருகிறது. அது எங்கோ தொடங்கியது. இறுதியாக அது செல்லும் பாதை இதுதான் என்று எனக்குத் தெரியாது. என் வாழ்நாள் முழுவதும் முதலில் பறக்கும் வாய்ப்புகளைப் பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவேன். இது எனக்கு ஒரு கனவு வேலை” எனத் தெரிவித்துள்ளார்.

1984இல் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா வரலாறு படைத்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளிக்குச் செல்லும் நாட்டின் இரண்டாவது விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.